வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட வில்வராயநத்தம் பகுதியில் மழைநீர் பாதிப்பினால் கொசுப்புழு உற்பத்தியை தடுக்கும் பொருட்டு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணிகளை துவக்கிவைத்தார்.
முன்னதாக அமைச்சர் தலைமையில் கடலூர் சுற்றுலா மாளிகையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இதில் சிறப்பு கண்காணிப்பா அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலர் ககன் சிங் பேடி,தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டுத் திட்ட இயக்குனர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராமன் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் எம்எல்ஏ அய்யப்பன், மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையர் அனு சிதம்பரம், சார் ஆட்சியர் ரஷ்மி ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.