கோவை அவிநாசி சாலையில் உள்ள கிரான்ட்ட ரீஜன்ட் ஹோட்டலில் அந்தமான் சங்கம் டூர் ஆபரேட்டர்கள் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள ட்ராவல் ஏஜென்ட் அசோசியேசன் சார்பில் அந்தமான் டூரிசம் ரோட்ஷோ நடைபெற்றது.
இதில் கோவை ட்ராவல் ஏஜென்ட் அசோசியேஷன் தலைவர் பாரதி மற்றும் அந்தமான் டூரிஸ்ட் அசோசியேஷன் தலைவர் வினோத் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.மேலும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் அந்தமானில் உள்ள சுற்றுலா தளங்கள் குறித்து டிராவல் ஏஜென்ட் உரிமையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாடுகளுக்கு மட்டும் பயணிக்காமல் உள்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களையும் சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டும் என அந்தமான் டூரிஸ்ட் சங்கத்தினர் கேட்டுக்கொண்டனர்.
அந்தமான் மற்றும் இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களை தமிழக அரசு மற்றும் மத்திய அரசு முன்னெடுத்து பொது மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என ட்ராவல் ஏஜென்ட் சங்கத்தினர் தெரிவித்தனர்.