கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் இன்று மேட்டுப்பாளையம் சாலை துடியலூர், வெள்ளகிணறு, ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி வருகின்ற சனிக்கிழமை மேட்டுப்பாளையம் சாலை ஜி.என் மில் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ள தனியார் வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாட்டுப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து துடியலூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரடியாக சென்று அங்குள்ள வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் வெள்ளக்கிணறு பகுதியில் ஆதி அறக்கட்டளை திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் கலைஞரின் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகராட்சி துணை ஆணையர் சிவகுமார், வட்டாட்சியர் தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.