fbpx
Homeபிற செய்திகள்போப் பிரான்சிஸ் மறைவு: திருச்செங்கோட்டில் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்

போப் பிரான்சிஸ் மறைவு: திருச்செங்கோட்டில் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்

போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருச்செங்கோட்டில் 200க்கும் மேற்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக கருதப் படும் போப் ஆண்டவர் திருத்தந்தை பிரான்சிஸ் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி திருச்செங்கோட்டில் ஊர்வலம் நடைபெற்றது.

பங்குத்தந்தை எட்வர்ட் ததேயூஸ் தலைமையில் மெட்டாலா இயேசு சபை பொன்.ரூபன் முன்னிலையில் மௌனமாக மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

இந்த மௌன அஞ்சலி ஊர்வலம் சேலம் ரோடு புனித மரியன்னை ஆலயத்தில் இருந்து நாமக்கல் ரோடு வரை நடைபெற்றது. மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபம் செய்து மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.

இதில் 200க்கும் மேற்பட்ட கத்தோலிக்க கிறித்துவர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img