-சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2022- -& 23-ம் கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதிய மாணவி கிருத்திகா 500-க்கு 492 மதிப்பெண்களும், மாணவிகள் கார்த்திகா மற்றும் ஹரிணி 490 மதிப் பெண்களும், அபிராமி, பாலகுழலினி ஆகியோர் 489 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத் துள்ளனர். மேலும் இப்பள்ளி 99.1 சதவீ தம் தேர்ச்சியை பெற்றுள்ளது.
குறிப்பிட்ட பாடங்களில் 16 மாணவர்கள் 100-க்கு 100 மதிப் பெண்கள் பெற்றுள்ளனர். 11-ம் வகுப்பில் மாணவி அபிராமி 600-க்கு 576 மதிப்பெண் களும், மாண வர்கள் சபரிரா ஜன் 573 மதிப்பெண்களும், வெங் கட்ராமன் 569 மதிப் பெண்களும் பெற்றனர்.
மேலும் 4 மாணவர்கள் குறிப் பிட்ட பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்தனர். பிளஸ்-2 தேர்வில் மாணவி யுவபாரதி 600-க்கு 585 மதிப்பெண்களும், தில்லைநாயகி 582 மதிப்பெண்களும், ஹரிகி ருஷ்ணன், அபர்ணா ஆகியோர் 578 மதிப்பெண்களும் பெற்றனர். இதில் 26 மாணகளில் 100-க்கு 100 மதிப்பெண் பல்வேறுகள் பெற்றுள்ளனர்.
தேர்விலும் 99.5 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.தேர்வில் சாதனை படைத்த மாணவர்களையும், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை பள்ளி தாளாளர் குமார், முதல்வர் ரூபியால் ராணி, துணை முதல்வர் அறிவழகன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.
இதில் சரோஜா வேலுசாமி, பெற்றோர்கள் மற்றும் புகைப் பட கலைஞர் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.



