பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியில் 14 ஆம் ஆண்டு கல்லூரி விளையாட்டு விழா நடைபெற்றது. மாணவ மாணவிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு பிளாக் பேந்தர்ஸ், ஒயிட் மேவ்ரிக், ரெட் டைட்டன்ஸ், ப்ளூ பிரேவ்ஸ் என அணிகளுக்கு பெயரிடப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
கால்பந்து, கபடி, கிரிக்கெட், வாலிபால், த்ரோபால் போன்ற குழு விளையாட்டுகளும் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர்,800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர், குண்டு எறிதல் மற்றும் 4 ஜ் 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டிகள் நடத்தப்பட்டன/ 130 புள்ளிகளுடன் பிளாக் பேன்தர்ஸ் அணியினர் சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாக டீன் சரவணகுமார் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இளம் விளையாட்டு வீரர்கள் என முதலாம் ஆண்டு விக்னேஷ் ராம் மற்றும் தினேஷ் லட்சுமணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.
கல்லூரியின் தாளாளர் சண்முகம் , முதல்வர் (பொறுப்பு) கோகிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.



