சிதம்பரம் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் கே.ஆர். செந்தில்குமார் தலைமையில் திங்கட்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன், பொறியாளர் மகா ராஜன் முன்னிலை வகித்தனர்
கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர் கொறடாவும் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகரன், வெங்கடேசன் நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், ராஜன், மணிகண்டன் உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர்கள்.
கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் செந்தில்குமார் கூறுகையில், உரிய கால அவகாசம் அளித்து மக்களிடம் வரி வசூலிக்க வேண்டும் என அதிகாரியிடம் தெரிவித்துள்ளேன். நகரில் திரியும் பன்றிகள், நாய்கள், மாடுகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டு குடிநீர் திட்டம்
ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் வீடு கட்டி தரப்படும். கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் சிதம்பரம் நகரில் 33 வார்டுகளின் குழாய் அமைத்து தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வக்காரமாரி நீர்த் தேக்கம் ரூ.8 கோடியில் சீரமைக்கப்படும் சிதம்பரம் நகரில் புதிய பேருந்து நிலையம், வணிக வளாகம் கட்டுதல் சாலைகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன, என்றார்.



