fbpx
Homeபிற செய்திகள்‘ஒழுக்கம்’ சிறந்து விளங்க அடித்தளம் அமைக்கும் ‘சிமாட்ஸ்’ முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிவுரை

‘ஒழுக்கம்’ சிறந்து விளங்க அடித்தளம் அமைக்கும் ‘சிமாட்ஸ்’ முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிவுரை

சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வெற்றி மற்றும் ஒழுக்கம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் பி. ரமேஷ் வரவேற்றார்.

முதலாம் ஆண்டு என்ஜினியரிங் பட்டதாரி மாணவர்கள் அவர்களின் என்ஜினியரிங் வாழ்க்கையில் அடையும் வெற்றி மற்றும் ஒழுக்கத்தை கடைபிடிப்பதற்கு அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விப்ரோ இன்பிராஸ்டிரக்சர் என்ஜினியரிங் நிறுவனத்தின் ஒப்புதல் மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் பிரிவின் இழப்பீடு மற்றும் நன்மைகளுக்கான தலைவரும், தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்சங்கத்தின் மனிதவள நிபுணத்துவ குழுவின் இணை இயக்குநருமான ராணி சக்தி ஸ்ரீ பேசினார்.

ஒழுக்கம் நாம் சிறந்து விளங்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதோடு, தொழில்முறை வளர்ச்சிக்கும் வழி வகுக்கும். நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு என்ஜினியரிங் சார்ந்த திட்டங்களுக்கும் பெரும்பாலும் கூட்டு முயற்சிகள் தேவைப்படும்.

நாம் விரும்பும் இலக்கை அடைவதற்கு குழுவாக சேர்ந்து பணியாற்றுவது என்பது மிகவும் முக்கியமானது. அப்போதுதான் நாம் நினைத்த முடிவுகள் கிடைக்கும். வலிமைமிக்க தொழில்முறை உறவுகளை ஏற்படுத்துதல், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் கூட்டுப் பணிச் சூழலை வளர்க்கும் என்றார் அவர்.

சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் கழகத்தின் வேந்தர் டாக்டர் என்.எம்.வீரையன் மற்றும் இக்கல்லூரி இயக்குநர் டாக்டர் ரம்யா தீபக் ஆகியோர் இதுபோன்ற ஊக்கமளிக்கும் கருத்தரங்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களின் வெற்றிக்கும், அவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிப்பதற்கும் அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.

படிக்க வேண்டும்

spot_img