கோவையில் நடைபெற்ற 5-வது சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் இந் தியா, மலேசியா,இலங்கை, ஈரான், இந்தோனேசியா, ஓமன் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண் டனர்.
இதில் இந்தியா சார்பில் தி சம்ஹிதா அகாடமி பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கட்டா மற்றும் குமித்தே என நடைபெற்ற இருபிரிவுகளில் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது கோப்பைகளை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இப்போட்டியில் பங்குபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி முதல்வர் புஷ்பஜா, மேலாளர் மோகன்தாஸ், கராத்தே மாஸ்டர் மோகன் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.