fbpx
Homeபிற செய்திகள்சென்னை சங்கரா மருத்துவமனையில் 2 புதிய பார்வை மையங்கள், மொபைல் பார்வை மையம் தொடக்கம்

சென்னை சங்கரா மருத்துவமனையில் 2 புதிய பார்வை மையங்கள், மொபைல் பார்வை மையம் தொடக்கம்

ஒருங்கிணைந்த மற்றும் பலப்படுத் தப்பட்ட நகர்ப்புற சுகாதார சேவை வழங்கல் அமைப்பின் மூலம் தரமான கண் சுகாதார சேவைகளுக்கான அணுகலை அதிகரிக்க, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் குளோபல் பிசினஸ் சர்வீசஸ் (ஜிபிஎஸ்) பிரைவேட் லிமிடெட், இந்தியா சைட்சேவர்ஸ் இந்தியாவுடன் இணைந்து இரண்டு புதிய விஷன் சென்டர்கள், ஒரு மொபைல் விஷன் சென்டர் ஆகியவற்றை சென்னையில் தொடங்கியுள்ளது.

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ் (ஜிபிஎஸ்) பிரைவேட் லிமிடெட் நான்கு ஆண்டுகளுக்கு நகரத்தில் கண் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துவதற்காக இரண்டு Vision மையங்களுக்கும் மொபைல் Vision மையத்திற்கும் நிதியுதவி அளிக்கும்.

Sightsavers India, தவிர்க்கப் படக்கூடிய குருட்டுத்தன்மை மற் றும் இயலாமை சேர்க்கையில் பணிபுரியும் ஒரு மேம்பாட்டு நிறுவனமான இந்தியா விஷன் இன்ஸ்டிடியூட் உடன் இணைந்து இரண்டு பார்வை மையங்களில் 6,000 க்கும் மேற்பட்டவர்களின் கண்புரை நோய்களைக் கண்டறிந்து அவர்களை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்க முயல்கிறது.

அடுத்த நான்கு ஆண்டுகளில் 8,000 க்கும் மேற்பட்ட கண் கண்ணாடிகள் வழங்கப்படும். 2,000 பேருக்கு நீரிழிவு ரெட்டினோபதி பரிசோதனை செய்யப்படும்.

ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வங்கி மற்றும் குளோபல் பிசினஸ் சர்வீசஸ் தலைவர் – கருணா பாட்டியா கூறிய தாவது: ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு அதன் Seeing is Believing திட்டமானது, நாட்டின் தொலைதூர மற்றும் குறைந்த சேவைப் பகுதிகளில் பணிபுரியும் சைட்சேவர்ஸ் இந்தியா வின் நீண்டகால பாட்னராக இருந்து வருகிறது என்றார்.

சைட்சேவர்ஸ் இந்தியா நிறுவனத் தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.என். மொஹந்தி கூறியதாவது: பார்வைக் குறைபாடு (NPCB & VI). இந்த அணுகுமுறை கேபிளி ஹெல்த் சிஸ்டம்ஸ் ஸ்ட்ரெங்தனிங் கட்டமைப்புடன் இணைந்துள்ளது.

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்டின் ஆதரவுடன் இந்த முயற்சிகளை தொடங்குவது, பின்தங்கிய மக்களுக்கான கண் பராம ரிப்பு சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதன் மூலம் கண் சார்ந்த சுகாதார தேவைகளுக்கும் சேவை வழங்கல் தேவைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் என் றார்.

.IVI-ன் தலைமை நிர்வாக அதிகாரி வினோத் டேனியல் கூறியதாவது:
பார்வை மையங்கள் மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக் கத்தை ஏற்படுத்த உதவும். தெளிவான பார்வையுடன், அதிக வேலை வாய்ப்புகள், அதிகரித்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட உற்பத்தித்திறன் இருக்கும். இது மக்களை, குறிப்பாக முதியவர்களை மீட்டெடுக்கும்.

‘பார்வை ஸ்கிரீனிங் சேவைகள்’

‘பார்வை ஸ்கிரீனிங் சேவைகள்’ மற்றும் அதனை சரிசெய்யும் கண் ணாடிகள் மலிவு விலையில் பார்வை மையங்களில் கிடைக்கும்.

பணம் செலுத்த முடியாதவர்களுக்கு இலவச திருத்த கண்ணாடிகள் வழங்கப்படும். புதிய மையங்கள் பாலவாக்கத்தில் உள்ள எங்களின் பார்வை மையத்துடன் இணைந்து இருக்கும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img