90 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் வரவேற்பை பெற்ற பிராண்டான அமெரிக்கன் டூரிஸ்டர், புதிய விளம்பரப் படத்தை வெளியிட்டுள் ளது.
இந்நிறுவனத்தின் விளம்பர தூதராக கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி இருந்து வருகிறார்.
தற்போது புதிதாக ‘எல்லைகளை கடந்து செல்லுங்கள்’ என்னும் பெயரில் புதிய விளம்பரத்தை யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் அமெரிக்கன் டூரிஸ் டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
புதிய விளம்பரம் குறித்து சாம்சோனைட் இந்தியா வின் தலைமை செயல் அதிகாரி ஜெய் கிருஷ்ணன் கூறியதாவது: அமெரிக்கன் டூரிஸ்டர் பயணத்தை எளிமையாக்குவதையும் தாண்டி உணர்வுகளுடன் தொடர்புடையதாக உள்ளது.
வழக்கமான சுற்றுலா வாக பார்ப்பதை விட்டு விட்டு புதிய அனுபவங்களைத் தேடுங்கள் என தனிநபர்களை ஊக்குவிக்கிறது என் றார். அமெரிக்கன் டூரிஸ்டர் நிறுவனத்தின் மார்க் கெட்டிங் நிர்வாக இயக்குநர் அனுஸ்ரீ தைன்வாலா கூறியதாவது: எங்கள் நிறுவனம் ஒவ்வொருவரும் தங்கள் எல்லைகளை கடந்து செல்ல வேண்டும் என்று விரும்புகிறது.
விராட் கோலியுடன் இணைந்து எடுக்கப்பட்டுள்ள விளம்பரப் படமானது, உலகில் எங்கு பயணம் செய்தாலும் அந்தந்த இடத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்பதை வேடிக்கை யாக காட்டி இருக்கிறது என்றார்.
பேமஸ் இன்னவொஷன் நிறுவனத்தின் தலைமை கிரியேட்டிவ் அதிகாரி ராஜ் காம்ப்ளே கூறியதாவது: ‘எல்லைகளை கடந்து செல்லுங்கள்’ என்னும் புதிய விளம்பரம், புதிய விஷயங்களை நீங்கள் அனுபவிப்பதன் மூலம் ஏற்கனவே முயற்சித்த மற்றும் பரிசோதித்த பல்வேறு விஷயங்களைத் தாண்டி புதிய கலாச்சாரத்திற்கு அழைத்துச் செல்கிறது என்றார்.