இந்தியாவின் முன்னணி உணவு சேவை நிறுவனமான ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் லிமிடெட் (JFL) நிறுவனமானது, அமெரிக்காவின் ஐகா னிக் ஃபிரைடு சிக்கன் பிராண் டான பாப்பாய்ஸ் (Popeyes®) இன் முதல் உணவகத்தை சென்னையில் நாளை (ஜன.20) தொடங்குவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவுக்குள் பெங்களூர் உணவகத்தில் பாப்பாய்ஸ்டி இன் முதல் அறிமுகம் நடந்தது. தொடர்ந்து ஒரு வருடத்திற் குள் நகரம் முழுவதும் 12 உணவகங்களாக விரைவான விரிவாக்கம் செய்யப்பட்டது.
இது இந்திய விருந்தினர்களிடையே பிராண்டின் வளர்ந்து வரும் பிரபலத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.. லூசியானாவில் துவங்கப்பட்ட பாப்பாய்ஸ்டி பிராண்ட் ஆனது 1972ல் நிறுவப்பட்டது.
பீனிக்ஸ் மார்க்கெட்
அமெரிக்காவின் மிகவும் பிரபலமான மற்றும் வேகமாக வளரும் சிக்கன் பிராண்டுகளில் ஒன்றாகும். இந்த பிராண்ட் தனது விருந்தினர்கள் அனைவரையும் சென்னையில் உள்ள முதல் உணவகத்தில் வரும் 20 முதல் பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மாலில் வரவேற்கிறது.
பாப்பாய்ஸ்டி இந்தியாவின் நிர்வாக துணைத் தலைவர் மற்றும் வணிகத் தலைவர் கௌரவ் பாண்டே பேசும்போது, கேஜன் சுவை கொண்ட கோழி பல்வேறு நாடு களில் ஒரு மோகத்தை உருவாக்கியுள்ளது.
பெங்களூரில் பிராண்டின் அறிமுகத்திற்குப் பிறகு, இந்தியாவில் சிக்கன் உணவுகளை விரும்பும் நுகர்வோர் மத்தியில் இதேபோன்ற எதிர்பார்ப் பினை பார்க்க முடிகிறது.
பாப்பாய்ஸ்டி சிக்னேச்சர் கோழியின் சின்னமான ஜூசி அமைப்பு, கடைசிக் கடி வரை ருசியானது. 12 மணிநேரம் மரைனேட் செய்யப்பட்ட ஃப்ரெஷ் கோழியின் தனித்துவமான தயாரிப்பில் இருந்து வருகிறது என்றார்.