சென்னை மாநகரில் எம்ஜிஎம் ஹெல்த்கேர், “நம்ம ஹெல்த்” அட்டை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை வாழ் மக்களுக்காக ஆறு தனித்தன்மை வாய்ந்த நன்மைகளை உள்ளடக்கிய இது ஒரு சிறப்பான உடல்நல மருத்துவ சேவைகளுக்கான அட்டையாகும்.
இந்த அட்டை வெளி நோயாளிகளுக்கான மருத்துவ ஆலோசனை கட்டணங்கள், நோயறிதலுக்கான பரிசோதனைகள், மருந்தக பில்கள், காப்பீடு வசதி இல்லாத நோயாளிகளுக்கு குறைந்த கட்டணத்தில் அறை என பல சேவைகள் வழங்கும்.
இம்மருத்துவமனை தொடங்கப்பட்டதன் ஆறாவது ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்வின் ஒரு பகுதியாக, 10 கி.மீ சுற்று வட்டத்திற்குள் வசிக்கும் மக்களுக்கு அவசர தேவைகளுக்கு உடனடி மருத்துவ சேவையை உறுதி செய்யும் நோக்கில், எம்ஜிஎம் ஹெல்த்கேர் ஒரு இலவச ஆம்புலன்ஸ் சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் பிரசாந்த் ராஜகோபாலன் கூறுகையில், “எங்களின் ஆறாவது ஆண்டு விழா நிகழ்வு ஒரு காலவரிசையை மட்டும் குறிக்கவில்லை. இது நாங்கள் வழங்கி வரும் அர்த்தமுள்ள மருத்துவ சேவையின் மீது நாங்கள் கொண்டிருக்கும் தொடர்ச்சியான அர்ப்ப ணிப்பை பிரதிபலிக்கிறது” என்றார்.
தொடர்ந்து, ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்ததற்குப் பிறகு, இந்நிகழ்வில் தலைமை விருந் தினராக கலந்து கொண்ட அண்ணா நகர் சரகத்தின் துணை காவல் ஆணையர் டாக்டர் பூக்கியா ஸ்நேகா பிரியா, மருத்துவமனையின் புதிய செயல்பாட்டுக்கு பாராட்டு தெரிவித்தார்.



