fbpx
Homeபிற செய்திகள்இந்திய விமானத்துறையில் நுழையும் ‘ப்ளை பாரதி’

இந்திய விமானத்துறையில் நுழையும் ‘ப்ளை பாரதி’

‘ஃப்ளை பாரதி’ விமான நிறுவனமும் ஏரோ நாட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெடும் இணைந்து இந்திய வானத்தில் தனது விமான சேவை பயணத்தைத் தொடங்கத் தயாராக உள்ளது.

தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான ஃப்ளை பாரதி நிறுவனத்தின் தலைவர் கிரிஷ் சிவசங்கர் பிள்ளை, “இந்திய விமானப் போக்குவரத்து சந்தையில் நுழையும் இத்தருனத்தில் விமான தொழில்துறையானது அரசாங்கத்தின் மூலம் மேம்படுத்தப்பட்டு வளர்ந்து வருகிறது.

அதனால் விமானப் பயணத்தை நோக்கி நுகர்வோர் விருப்பத்தை மேம்படுத்தக்கூடிய முக் கியமான கட்டத்தில் இருக்கிறோம். விமானப் போக்கு வரத்துத் துறையில் விரிவான சலுகைகளை மையமாகக் கொண்டு இந்தியாவின் விமானப் பயணத்தில் நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்க இருக்கிறது என்றார்.

இந்நிறுவனம் 1.8 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளுக்காக இங்கிலாந்தைச் சேர்ந்த SRAM மற்றும் MRAM குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துமிட்டுள்ளது.

இந்த நிதி உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான வணிகங்களின் விரிவாக்கத்திற்காகவும் மேலும் உலகளாவிய வணிகம் சார்ந்த சவால்களுக்கு நிதியுதவி மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதற்காகவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

SRAM மற்றும் MRAM குழுமத்தின் தலைவர் குருஜீ குமரன் சுவாமி கூறும்போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானப் பயணிகள் சந்தையாக இருந்து வருகிறது.

அதனால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்தை மாற்றியமைப்பதற்கான முக்கிய மாற்றப் புள்ளியில் நாடு உள்ளது. இதன் அடிப்படையில் நிறுவனத்தின் மூலம் உலகளவில் சிறந்த விமானச் சந்தையாக நாடு வெளிப்படும் என்றார்.

விமானப் போக்குவரத்து துறையின் மூத்த தலைவரான ஷேர் கான், ஃப்ளை பாரதியின் குழும தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img