கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி சார்பில் கிராமப் புற மகளிர் தொழிற்நுட்பப் பூங்காவில் பயிற்சி பெறும் பெண்களுக்கு உணவு கையாளுபவர்களுக்கான உணவு பாதுகாப்பு மேற் பாவையாளர் அடிப்படை கேட்டரிங்க் பயிற்சி வழங்கப்பட்டது. அதில் 39 பெண்களுக்கு தமிழ்நாடு அரசு கோவை மாவட்ட உணவு பாதுக்காப்புத்துறை அதிகாரி டாக்டர் அனு ராதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கினார்.

விழாவில் கல்லூரி செயலர் முனைவர் யசோதாதேவி, RWTP மேலாளர் முனைவர் ஆ.அகிலாண்டேஸ்வரி, உணவு மேலாண்மை துறை தலைவர் முனைவர் தீபா, பயிற்சியாளர் சங்கவி மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் பலரும் பங்கேற்றனர்.



