கோவை கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரி சார்பில் மாநில அளவிலான ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற் றது. இப்போட்டிகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து ஆசிரியர்கள் 36 குழுக்களாகப் பங்கேற்று தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.
இதில் பங்கேற்ற கோவை கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியின் ஆசிரியர்கள் குழு தங்கள் விளையாட்டுத் திறமையை யும் குழு ஒற்றுமையையும் வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
இதில் குறிப்பிடத்தக்க சாதனையாக கைப்பந்து போட்டியில் கோவை கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியின் ஆசிரியர்கள் அபாரமாக விளையாடி முதலிடம் பிடித்து நிறுவனத்திற்கு பெருமை சேர்த்தனர். இப்போட்டியில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரி குழுவினர் இரண்டாம் இடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்க ளுக்கு கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக்கல்லூரி முதல்வர் டாக்டர் ராமசாமி பரிசுகள் வழங்கியதோடு, உற்சாகமாக விளையாட்டுகளில் பங்கேற்ற அனைவருக்கும் உடல் தகுதியின் முக்கியத்துவம் மற்றும் கற் போரிடையே தேவையான குழு இணைப்பின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
சாம்பியன் பட்டம் வென்ற கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியின் ஆசிரியர்கள் குழுவினரை பள் ளியின் தலைவர் என். அருள் ரமேஷ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.



