fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி அருகே கோவில் விழாவில் மாட்டு வண்டி போட்டிகள்

தூத்துக்குடி அருகே கோவில் விழாவில் மாட்டு வண்டி போட்டிகள்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் யூனியன் அயிரவன்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோயில் கொடை விழாவையொட்டி மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது.

பெரிய வண்டி, சிறிய வண்டி என 2 பிரிவுகளாக இந்த பந்தயம் நடந்தது. போட்டிகளை சண்முகையா எம்எல்ஏ, ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், அயிரவன்பட்டி தொழிலதிபர் முருகேச பாண்டியன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

10 வண்டிகள் பங்கேற்ற பெரிய மாட்டுவண்டி பிரிவில் முதல் பரிசு ரூ.1.50 லட்சத்தை கடம்பூர் கருணாகர ராஜா வண்டியும், 2வது பரிசு ரூ.1 லட்சத்தை சீவலப்பேரி துர்காம்பிகா வண்டியும், 3ம் பரிசு ரூ.50 ஆயிரத்தை சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் வண்டியும் பெற்றன.

சிறிய மாட்டுவண்டி போட்டி பிரிவில் 22 வண்டிகள் கலந்து கொண்டதால் போட்டி இருபிரிவாக நடத்தப்பட்டது. முதல் சுற்றில் சீவலப்பேரி துர்காம்பிகா, சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார், புது சின்னையாபுரம் தர்மலிங்கம் ஆகியோரின் வண்டிகள் முதல் 3 இடங்களையும் 2வது சுற்றில் துரைசாமிபு ரம் சுரேஷ்குமார், மதுரை ஆர்.எஸ்.நடராஜன் அம்பலம், மேடைச்சிபுரம் முத்து ஈஸ்வரி ஆகியோர் வண்டிகள் முதல் 3 இடங்களையும் பிடித்தன.

இவர்களுக்கு பரிசுத்தொகை முறையே ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் பிரித்து வழங்கப் பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர் தொழிலதிபர் அசோக்குமார், ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

போட்டிக்கான ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் மற்றும் மாட்டுவண்டி பந்தயக் குழுவினர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img