fbpx
Homeபிற செய்திகள்பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் கணித வார விழா

பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் கணித வார விழா

காங்கேயம் குழும நிறுவனங்கள் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் கணித வார விழா டிசம்பர் 18- ம் தேதி முதல் 22 வரை கொண்டாடப்பட்டது.

பல்வேறு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு மாணவர்கள் பங்கு பெற்றனர். கணித மாடல்கள் நாடகம் போன்ற வடிவங்கள், கணிதத்தில் புதுமைகளைப் பற்றி புதிய யோசனைகளை மாணவர்களால் வழங்குதல், ராமானுஜம் வாழ்க்கை மற்றும் பணி குறித்த வினாடி வினா போட்டி, ராமானுஜம் பற்றிய திரைப்படம், வேத கணிதம் பற்றிய பட்டறை மற்றும் ராமானுஜம் வாழ்க்கை மற்றும் பணி பற்றிய சிறப்பு சொற்பொழிவு ஆகிய நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டது.

பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி மாணவ மாண விகள் இதில் கலந்து கொண்டனர். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக முனைவர் ஜான்சி ராணி (புல முதல்வர், அறிவியல் மற்றும் மனிதநேய துறை, சேது இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, விருதுநகர்), பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ராம்குமார்,
அறிவியல் மற்றும் மனிதநேய துறை தலைவர் முனைவர் கார்த்திகேயன் காங்கேயம் குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் சி.வெங்கடேஷ், தலைவர் ராமலிங்கம், செயலாளர் வெங்கடாச்சலம், தாளா ளர் ஆனந்த வடிவேல் மற்றும் பொருளாளர் பால சுப்ரமணியம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்

படிக்க வேண்டும்

spot_img