பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் அதன் மில்க் பிக்கிஸ் போர்ட்ஃபோலியோவில் சமீபத்திய அறிமுகமாக ஒரு புதிய ரகத்தை அறிவித்துள்ளது. பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் ஸ்மார்ட்டான இது இந்தியாவின் முதல் DHA மற்றும் 16 நுண்ணூட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டாகும். மேலும், 100% கோதுமை மாவினால் தயாரிக்கப்பட்டது.
உலக செஸ் சாம்பியன் குகேஷ் டொம்மராஜு இந்த புதிய பிஸ்கட்டினை தலைமை தாங்கி அறிமுகம் செய்வதன்மூலம், பிரிட்டானியா மில்க் பிக்கிஸுடன் ஒருங்கிணைந்துள்ளது. மேலும் இது இளைஞர்களின் அறிவாற்றல் வளர்ச்சியில் செஸ் வகிக்கக்கூடிய முக்கிய பங்கை வலுப்படுத்துகிறது.
இந்த அறிமுக நிகழ்ச்சியில் பேசிய பிரிட்டானியா நிறுவனத்தின் தலைமை மேம்பாடு மற்றும் தர அலுவலர், சுதிர் நேமா கூறுகையில், “இன்றைய ஆரோக்கிய உணர்வுள்ள நுகர்வோருக்கு புதிய, ஆரோக்கியமான, பொருத்தமான மற்றும் உற்சாகமூட்டும் தயாரிப்புகளை உள்ளடக்கிய ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்க வேண்டும் என்கிற எங்கள் முயற்சிக்கு இந்த புதிய அறிமுகம் ஒரு நற்சான்றாகும்”
என்றார்.
இந்த கூட்டணி குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட குகேஷ் டொம்மராஜு கூறுகையில், “ பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் ஸ்மார்ட்டுடன் ஒருங்கிணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் ஸ்மார்ட்டான முடிவுகளை எடுக்க உதவும் என்கிற செஸ்ஸின் அதே தத்துவத்தை பிரதிபலிக்கும் ஒரு தயாரிப்பாக இருக்கும்,” என்று கூறினார்.
மில்க் பிக்கிஸ் ஸ்மார்ட்டின் வெளியீட்டை அறிவிப்பதற்கான தொலைக்காட்சி விளம்பரத்தை முல்லன் லிண்டாஸ் நிறுவனம் கருத்தாக்கம் செய்தது.



