ஈரோடு மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டுப் போட்டிகள் நந்தா பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கபடி போட்டிகள் தொடங்கின. நந்தா கல்விக் குழும உடற்கல்வி இயக்குநர்கள் லட்சுமணன், பாஸ்கரன், தேவகாந்தன், அரவிந்த், பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் பிரபாகரன், ஈரோடு சட்டக் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் மணி, ஜே.கே. முனிராஜா பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் போட்டி தொடங்கியது.
தொடக்கமாக நந்தா கலை அறிவியல் கல்லூரி மற்றும் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி அணி களுக்கு இடையிலான கபடி போட்டி நடைபெற்றது.



