Homeபிற செய்திகள்மார்பகப் புற்றுநோய் மருத்துவ முகாம்

மார்பகப் புற்றுநோய் மருத்துவ முகாம்

கோவை மாநகர காவல் ஆணையர் அறிவுரைகளின் படி கங்கா மருத்துவமனை மற்றும் யங் இண்டியன்ஸ் உடன் கோவை மாநகர காவல் துறை இணைந்து நடத்தும் காவலர் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கான மார்பகப் புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் பாத பராமரிப்பு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கோவை பி.ஆர்.எஸ் மைதானம் வளாகத்தில் நடைபெற்றது.

இதனை கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கோவை மாநகர தெற்கு துணை ஆணையர் கே.சரவணகுமார், ஆயுதப்படை உதவி ஆணையர் ஏ.சேகர், வாகனப்பிரிவு காவல் ஆய்வாளர் ஏ.ஜெயவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் கோவை கங்கா மருத்துவமனை மருத்துவர் ஆர்,ராஜா சண்முக கிருஷ்ணன், கோவை யங் இண்டியன்ஸ் நிறுவனர் எஸ்.மனோஜ் கிருஷ்ண குமார் மற்றும் இருபால் காவல்துறையினர், குடும்பத்தினர் கலந்து கொண்டனர். பின்னர் செய் தியாளர்களுக்கு கோவை மாநகர காவல் ஆணையர் பால கிருஷ்ணன் பேட்டி அளித்தார்.

அப்போது கோவை சின்னவேடம்பட்டி ராணுவ குடியிருப்பில் மின்சாரம் தாக்கி சிறுவர்கள் உயிர் உயிரிழந்த குறித்த கேள் விக்கு பதில் அளித்த அவர், முதலில் சிஆர்பிசி 174 சந்தேகத்திற்கு மாறான மரணம் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் தொடர் விசாரணையில் 304 ஏ வழக்கு பதிவு செய்து விபத்து என்று வழக்கு மாற்றப்பட்டது. விபத்து ஏற்படுத்தியவர் மீதும் விபத்து ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும் இது குறித்து தற்பொழுது புலன் புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி, மின்வாரியத்தில் உரிய அனுமதியில்லாமல் பூங்கா அடியில் மின்சாரம் இணைப்பு கொண்டு வந்துள்ளதாகவும் அது சம்பந்தப்பட்ட நபர் மீதும் ஒப்பந்ததாரர் மீதும் புலன் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

தற்போது வரை விபத்து சம்பந்தமாக யார் மீதும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள் ளவில்லை. புலன் விசாரணை முடிந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
கோவையில் மாநகர் பகுதியில் U-Turn-னால் போக்குவரத்து நெரிசல் சிறிய அளவில் இருந்தாலும் பெரிய அளவில் மக்கள் வரவேற்கிறார்கள். முத லில் இருந்ததை விட தற்பொழுது போக்குவரத்து நேரம் பொதுமக்களுக்கு குறைவாக உள்ளது. ஒரு சில தவறுகளை விரைவில் சரி செய்வதாக கூறினார்.

கோடை காலத்தில் போக்குவரத்து காவலர்களுக்கு உரிய உடை வழங்கப்பட்டதாகவும் முக கவசங்களை ஒரு சில காவலர்கள் சரிவர அணி யாமல் இருக்கின்றனர். மேலும் காவலர்களுக்கு உடல் உறுதியாக, மன ரீதியாக அழுத்தங்களை போக்குவதற்காக இதுபோல மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தி வருவதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img