fbpx
Homeபிற செய்திகள்நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா

நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

உபதலை அரசு மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஐயறின் ரெஜி எழுதிய நடை பழகிய பொழுதுகள் என்ற கவிதை நூல், பொன்னி நதி பார்க்கணுமே என்ற கட்டுரை நூலும் பிராவிடென்ஸ் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மலர்விழி எழுதிய புறநானூறும் பொருளியல் வாழ்வும் என்ற ஆய்வு நூலும் இவ்விழாவில் வெளியிடப்பட்டது. அவர்கள் வெளியிட நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தாமோதரன் பெற்றுக் கொண்டார்.

கட்டுரை நூல்

கட்டுரை நூலை தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) சுவாமி முத்தழகன் வெளியிட கோவை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) புனிதா அந்தோணியம்மாள் பெற்றுக் கொண்டார்.

ஆய்வு நூலை உதகை அரசு கலைக் கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் எபனேசர் வெளியிட பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் ஷீலா பெற் றுக்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img