குன்னூர் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் 31 இண்டிபெண்டன்ஸ் கம்பெனியின் கீழ் 60 ஆண்டுகளுக்கு மேலாக என்.சி.சி இயக்கம் இயங்கி வருகிறது .
சமூக சேவை
இதன் கமாண்டராக கர்னல் சீனிவாசன் செயல்பட்டு வருகிறார். இவரின் முன்னிலையிலும் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் அருட் சகோதரர் தாமஸ் செல்வம் தலைமையில் தேசிய மாணவப் படையைச் சேர்ந்த , 95 மாணவர்கள் ,தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு குன்னூர், பாலகொலாவில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்று முதியோர்களுக்கு தேவையான பொருட்களையும், பண உதவியும் செய்து கலந்துரையாடினர். வளாகத்தில் மரக்கன்று நட்டும் சமூக சேவை செய்தனர்.
மாணவர்களுக்கும் புதிய அனுபவமாகவும், புத்துணர்ச்சியாகவும் அமைந்தது .சமூக சேவை செய்யும் உள்ளத்தை வளர்க்கக்கூடிய நிகழ்வாகவும் அமைந்தது. இந்நிகழ்வினை பள்ளியின் என்சிசி அலுவலர் பிரிட்டோ முன்னின்று நடத்தினார்.



