fbpx
Homeபிற செய்திகள்அமைச்சர் உதயநிதிக்கு கேஎம்சிஹெச் தலைவர் வாழ்த்து

அமைச்சர் உதயநிதிக்கு கேஎம்சிஹெச் தலைவர் வாழ்த்து

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு

கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

இளைஞர் நலனுக்காகவும் விளையாட்டு மேம்பாட்டுக்காகவும் பலவிதமான திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கோவை கே எம் சி ஹெச் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்ல பழனிசாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

இளைஞர்களின் திறனை தூண்டும் பலவித திட்டங்களைப் பாராட்டிய நல்ல பழனிசாமி கேஎம்சிஎச் சார்பிலும், டாக்டர் என் ஜி பி இன்ஸ்டியூட் சார்பிலும் ரூ.1  கோடி நன்கொடையாக அளித்தார்.

அப்போது அவர் கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு கோவை மக்கள் சார்பில் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். 

இந்த சந்திப்பின் போது கேஎம்சிஹெச் மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி எஸ். கார்த்திகேயன் உடனிருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img