கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் மருதாபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறைகள் கட்டுமானப் பணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
உடன் மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, கல்வி குழு தலைவர் மாலதி நாகராஜ், மாமன்ற உறுப்பினர் குமுதா குப்புசாமி, உதவி பொறியாளர் விமலா, சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் உள்ளனர்.