கோடை காலங்களில் பொதுமக்கள் தங்களது தாகத்தை தணிக்கும் வகையில் சாலையோரங்களில் விற்பனைக்காக கொண்டு வரப்படும் மோர்,கம்மங்கூழ், தர்பூசணி பழங்களை விரும்பி வாங்கி சாப்பிடுவது வழக்கம்.
இந்த நிலையில் கோடை காலங்களில் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்படும் தர்பூசணி பழங்கள் தற்போது முன்னதாகவே சீசன் துவங்கியுள்ளது.
இதனால் மேட்டுப்பாளையத்தின் பிரதான சாலைகளாக இருந்து வரும் கோவை, கோத்தகிரி,ஊட்டி, அன்னூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகளின் ஓரமாக குவித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தற்போது மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான சிறுமுகை, காரமடை, வெள்ளியங்காடு, தோலம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனி நிலவி வருகிறது.
இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் நிலை இருந்து வருகிறது.இந்த நிலையில் தற்போது பனிக்காலம் என்பதால் தர்பூசணி சீசன் துவங்கியும் விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சாலையோர வியாபாரிகள் கூறுகையில் வழக்கமாக கோடை காலங்களில் தர்பூசணி சீசன் துவங்கும். ஆனால், தற்போது முன்னரே துவங்கியுள்ளதால் திண்டிவனத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு தற்போது கிலோ ஒன்றிற்கு ரூ.40/- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சீசன் முன்கூட்டியே துவங்கியிருந்தாலும் தற்போது கடும் பனி நிலவி வருவதால் விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.