Homeபிற செய்திகள்பெருந்துறையில் இருந்து 40 நிமிடத்தில் கோவைக்கு வந்த உடல் உறுப்புக்கள்

பெருந்துறையில் இருந்து 40 நிமிடத்தில் கோவைக்கு வந்த உடல் உறுப்புக்கள்

நாற்பதே நிமிடத்தில் இதயம் மற்றும் கல்லீரல் ஈரோடு, பெருந்துறை அரசு மருத்துவமனையிலிருந்து கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டது. பெருந்துறை அரசு மருத்துவமனையில் 34 வயதுடைய ஒருவர் சாலை விபத்தில் தலையில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்தார். அவரது உறுப்புகளை தானமாக கொடுக்க குடும்பத்தினர் முன்வந்தனர்.

இந்நிலையில், மூளைச்சாவடைந் தவரின் இதயமும், கல்லீரலும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் இருந்து கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு கடந்த 12ம் தேதி அன்று 40 நிமிடங்களில் கொண்டு வரப்பட்டது.
தானமாக பெறப்பட்ட உறுப்பு களை கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு 40 நிமிடங்களில் கொண்டுவர திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை காவல்துறையினர் உதவினர்.
தொடர்ந்து, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி போலீ சாருக்கு நன்றியையும் பாராட்டு தலையும் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img