மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஓடந்துரை பகுதியில் பிளாக்தண்டர் தீம் பார்க் என்ற விளையாட்டு கேளிக்கை பூங்கா செயல்பட்டு வருகிறது.
தென் இந்தியாவின் புகழ்பெற்ற இந்த தண்ணீர் விளையாட்டு கேளிக்கை பூங்காவில் ஆண்டு தோறும் கோடை சீசனை தண்ணீரில் அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு குவிந்து வருகின்றனர்.
விளையாட்டு
அதே சமயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா வரும் பயணிகளை மகிழ்விக்க பல்வேறு புதிய புதிய தண்ணீர் விளையாட்டுகளையும் இதர விளையாட்டுகளையும் அறிமுகபடுத்தி வருகிறது
அந்த வகையில் இந்தாண்டு பிளாக் தண்டர் தீம் பார்க்கில் தன்டர்ஸ்பின், பைரைட்ஸ் என்ற இரண்டு புதிய விளையாட்டுகளை அறிமுகபடுத்தியுள்ளது
தண்டர்ஸ்பின் என்ற இந்த புதிய விளையாட்டு வட்ட வடிவில் 360 டிகிரியில் வேகமாக சுழன்று சுவற்றில் ஒட்டியது போல் உணர்வை ஏற்படுத்தி காற்றில் மிதப்பது போல் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில்
புதிய கோணத்தில் ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் குழந்தைகள், என பெரியவர்கள் குடும்பமாக ஒரே இடத்தில் விளையாடும் வகையில் பைரேட்ஸ் மழை விளையாட்டும் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது.
பெரியவர்களுக்கு 7400சதுர அடியில் இருந்தும் குழந்தைகளுக்கு 3500 சதுர அடிக்கு மேல் இருந்து தண்ணீர் கொட்டும் வகையில் தண்ணீர் விளையாட்டு ஏற் படுத்தியுள்ளது.
இதனை இன்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வின்சென்ட் அடைக்கலராஜ் திறந்து வைத்தார். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் விளையாட்டுக்களில்
அனுமதிக்கப்பட்டு விளையாடி மகிழ்ந்தனர்.



