fbpx
Homeபிற செய்திகள்‘நவீன தொழில்நுட்ப வளர்ச்சி இளம்தலைமுறையினருக்கு பெரும் சவால்’- இந்தியன் பப்ளிக் பள்ளியில் அறிவுரை

‘நவீன தொழில்நுட்ப வளர்ச்சி இளம்தலைமுறையினருக்கு பெரும் சவால்’- இந்தியன் பப்ளிக் பள்ளியில் அறிவுரை

நவீன கால சவால்களை இளம் தலைமுறையினர் எதிர் கொள்ளும் விதமாக தென்னிந்திய மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் நான்காவது அத்தி யாயம் கோவை தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது.

நவீன கால அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி வேகமடைந்து வரும் நிலையில்,இது குறித்த நேர்மறையான சவால்களும் அதிகரித்து வருகின்றன.

தலைமை

இந்நிலையில் இது போன்ற சவால்களை இளம் தலைமுறை மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ளும் விதமாக தென்னிந்திய மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டின் நான்காவது அத்தியாயம் சைமுன் (SIMUN) கோவையை அடுத்த எஸ்.எஸ்.குளம் பகுதியில் உள்ள தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது.
பள்ளி தலைவர் அசோக் குமார் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினர் கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது: இரண்டாவது உலகப்போர், அதன் தொடர்ச்சியாக பசுமை புரட்சி என மனிதர்களுக்கு ஒவ்வொரு காலகட்டமும் சவாலாகவே இருந்துள்ளது. அதனை எதிர்கொள்ள பல்வேறு திட்டங்கள் சரிவர செய்யப்பட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளோம்.

அண்மை காலத்தில் உலகையே ஆட்டி படைத்த கொரோனா கால நேரங்களில் நடைபெற்ற துன்பங்கள் ஏராளம். அது போன்ற பேரிடர் சம்பவங்களை எதிர் கொள்ள நம்மை நாம் தயார்படுத்தி கொள்ள வேண்டும்.

இளம் தலைமுறையினருக்கு பெரும் சவாலாக இருப்பது நவீன தொழில் நுட்ப வளர்ச்சி. இதில் சில சாதகங்கள் இருந்தாலும் எதிர்மறையான விளைவுகளை எதிர் கொள்ள இளம்தலைமுறை தங்களது திறன்களை வளர்த்தி கொள்வது அவசியம் என்றார்.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில், இன்றைய மாணவ, மாணவிகள் உலக அறிவோடு சர்வ தேச பிரச்சனைகளான அரசியல் சமூக பொருளாதார சுற்றுச்சூழல் ஆகியவற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

படிக்க வேண்டும்

spot_img