fbpx
Homeபிற செய்திகள்பூதங்குடி எஸ்.டி.சீயோன் பள்ளி 38-வது ஆண்டு விழா

பூதங்குடி எஸ்.டி.சீயோன் பள்ளி 38-வது ஆண்டு விழா

சேத்தியாசோப்பு அடுத்த பூதங்குடி எஸ்.டி.சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 38-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதற்கு பள்ளியின் நிறுவனர் சாமுவேல் தலைமை தாங்கினார்.

நிர்வாக இயக்குனர் சேன்றி தேவபெல், சேத்தியாத் தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவி சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளியின் இயக்குனரும், குழந்தைகள் நல டாக்டருமான தீபா சுஜின் ஆண்டறிக்கை வாசித்தார். நிர்வாகி சாமுவேல் சுஜின் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மதுரை உலகதமிழ் சங்கத்தின் துணைத் தலைவர் பர்வின் சுல்தானா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

விழாவை யொட்டி கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். முடிவில் தலைமை ஆசிரியர் ஆண்டனி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img