Homeபிற செய்திகள்பாரதியார் பல்கலைக்கழகம் தைவான் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு

பாரதியார் பல்கலைக்கழகம் தைவான் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு

பாரதியார் பல்கலைக்கழக விலங்கியல் துறையும், தேசிய தைவான் கடல்சார் பல்கலைக்கழகமும் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

இந்திய கவுன்சில் சமூக அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும், தேசிய அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் தைவானும் நிதி ஒதுக்கியுள்ளன. இதன் முதற்கட்டமாக, பாரதியார் பல்கலைக்கழக விலங்கியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் வே.ராமசுப்பிரமணியன், தைவான் சென்று மீன், இறால் வளர்ப்புக்கு தேவையான உயிர் உணவுகளை அதிகளவில் உற்பத்தி செய்வது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். 

பேராசிரியர் ஜியாங் ஷியோ ஹவாங் மற்றும் குழுவினர் விரைவில் இந்தியா வர உள்ளனர்.  வே.ராம சுப்பிரமணியனுக்கு பதிவாளர் பேராசிரியர் ராஜவேல் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img