Homeபிற செய்திகள்எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம் கொண்டையம்பாளையத்தில் ரூ.1 கோடியில் வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு

எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம் கொண்டையம்பாளையத்தில் ரூ.1 கோடியில் வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு

எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம், கொண்டையம்பாளையம் ஊராட்சியில் நிறைவடைந்த வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.22.25 லட்சத்தில் கட்டப்பட்ட ஆய்வகத்தையும், அண்ணாநகர், கோவில்பாளையம் ரேஷன் கடைகளையும் அவர் ஆய்வு செய்தார். சர்க்கார் சாமக்குளம் கிளை நுாலகத்தையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து, லட்சுமி கார்டன் பகுதியில் ரூ.30 லட்சத்தில் அமைக்கப்பட்ட சாலை மற்றும் துடியலுார்–கோவில்பாளையம் சாலை முதல் கொண்டையம்பாளையம் மயானம் வரை நபார்டு திட்டத்தில் ரூ.48.96 லட்சத்தில் அமைக்கப்பட்ட சாலையையும் ஆய்வு செய்தார்.

படிக்க வேண்டும்

spot_img