இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் என்.எஸ்.ஐ 58வது ஆண்டு மாநாடு, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் அக்டோபர் 8 முதல் 10ம் தேதி வரை நடக்கிறது. பத்ம பூஷண் டாக்டர் சி. கோபாலன் தொலைநோக்கில் உருவான இவ்வமைப்பில், 600க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். 27 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது முறையாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
2026ம் ஆண்டின் கருப்பொருளாக, ‘உணவு மற்றும் ஊட்டச்சத்து – அனைவரையும் உள்ளடக்கி யாரையும் விட்டுவிடாது’ என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8ல் மூன்று பயிலரங்குகள், 9ல் சுவரொட்டி விளக்கக்காட்சி, 10ல் நிறைவு விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. துணைவேந்தர் டாக்டர் வி. பாரதி ஹரிசங்கர், பதிவாளர் டாக்டர் எச். இந்து உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.



