fbpx
Homeபிற செய்திகள்பெல் ஹோட்டல் மேலாண்மை, கேட்டரிங் கல்வி நிறுவன ஆண்டு விழா

பெல் ஹோட்டல் மேலாண்மை, கேட்டரிங் கல்வி நிறுவன ஆண்டு விழா

பெல் ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்ப நிறுவனம் தனது 19வது ஆரம்ப நாளைக் கோலா கலமாக கொண்டாடியது.


நிறுவன வளாகத்தில் நடைபெற்ற விழா காலை 11 மணிக்கு திருவவையாற்றிப் பிரார்த்தனையுடன் தொடங்கியது. இந்தப் பிரார்த்தனையை பெல் மேட்ச் நிறுவன இயக்குனர் வைஜயந்தி வசந்த் ராஜசிங் வழங்கினார்.


இதைத் தொடர்ந்து, கல்லூரி பிரார்த்தனை மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. முருச்சுடர் விளக்கேற்றினார்.


கல்லூரி பேராசிரியர் அருண் பாபு வரவேற்றுப் பேசினார்.
புதிய மாணவர்களை தமிழ் மொழியில் வரவேற்று மூன்றாம் ஆண்டு மாணவர் சிவமணி உரையாற்றினார்.


நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜசிங் செல்லதுரை, நிர்வாக பொறுப்பாளர் பீனா ராஜசிங் மற்றும் இயக்குனர் விசித்திரா ராஜசிங் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அவர்களின் உரைகள் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கக் கூடியவையாக இருந்தன.

நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக குணசிங் செல்லதுரை (திருமங்கலம் மெட்டல் பவுடர் கம்பெனி இயக்குனர் மற்றும் பெல் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் பங்குதாரர்) சிறப்புரையாற்றினார். தனது உரையில், ஹோட்டல் தொழில்துறையில் தேர்ச்சி பெற உறுதியும், துணிவும் முக்கியம் என்பதை வலியுறுத்தினார்.


அவரை மூன்றாம் ஆண்டு மாணவி கோகுல்ஸ்ரீ அறிமுகப்படுத்தினார். முடிவில் நிறுவனத்தின் முதல்வர் டாக்டர் லியோ ராபர்ட். ஆர் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img