fbpx
Homeபிற செய்திகள்ஜவுளித்துறை பெண் தொழில்முனைவோருடன் பெலாரஸ் அமைச்சர் கோவையில் ஆலோசனை

ஜவுளித்துறை பெண் தொழில்முனைவோருடன் பெலாரஸ் அமைச்சர் கோவையில் ஆலோசனை

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பெலாரஸ் நாட்டின் ஜவுளித்துறை அமைச்சர் கோவையில் உள்ள ஜவுளித்துறை சார்ந்த பெண் தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸ் நாட்டின் ஜவுளித்துறை அமைச்சர் லக்கியானா கோவை யில் உள்ள ஃபிக்கி அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ஜவுளித்துறை சார்ந்த பெண் தொழில் முனைவோர் களுடன் கோவையில் ஆலோசனையில் ஈடுபட்டார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜவுளித் துறையில் உள்ள பஞ்சாலைத் தொழில், வீட்டு அலங்கார துணி வகைகள் உற்பத்தி, படுக்கை விரிப்புகள் உற்பத்தி என பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் உள்ள பெண் தொழில் முனைவோர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் சுமார் இரண்டு மணி நேரம் துறை சார்ந்த ஆலோசனையில் ஈடுபட்ட பெல்லாரஸ் நாட்டின் ஜவுளித்துறை அமைச்சர் இரு நாடுகளிடையே ஜவுளித்துறை சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்தாலோசித்தார்.

மேலும் இங்குள்ள தொழில் நுட்பங்களை விலரஸ் நாட்டின் ஜவுளித்துறைக்கு எப்படி எல் லாம் பயன்படுத்துவது என்பது குறித்தும் அதேபோல் தங்கள் நாட்டில் உள்ள புதுவகை தொழில் நுட்பங்கள் மற்றும் ஆடை வடிவமைப்புகள் போன்ற வற்றை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்தும் ஆலோசித் தார். மூன்று நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த அவர் டெல்லி மும்பை மற்றும் கோவையில் பெண் தொழில் முனை வோர்களை மட்டும் சந்தித்து ஆலோசனை நடத்திய தாகவும் கோவை ஜவுளி துறையில் முக்கியமான ஒரு நகரம் என்பதால் கோவைக்கு வந்து குறிப்பாக பெண் தொழில் முனைவோர்களுடன் ஆலோ சனை நடத்தியதாகவும் இந்த ஆலோசனை கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனவும் ஃபிக்கி அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img