பேங்க் ஆப் இந்தியா கோவை மண்டலம், உணவு மற்றும் வேளாண் தொழில், விவசாய உள்கட்டமைப்பு நிதி போன்ற பல்வேறு பிரிவுகளுக்கான வங்கிகளின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதன் மூலம் தற்போதைய பொருளாதார வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சி செயல்பாட்டில் தீவிர பங்கெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வங்கி 2023-24ம் ஆண்டிற்கான அதன் வாடிக்கையாளர் அவுட்ரீச் திட்டத்தை தொடங்கியது.
எம்எஸ்எம்இ தயாரிப்புகள் அதாவது வெல்கம் ஆஃபர், டாக்டர் பிளஸ், அசெட் பேக்ட் லோன் போன்றவற்றிலும் சில்லறை தயாரிப்புகள் அதாவது வீட்டுக் கடன், வாகனக் கடன் சொத்துக் கடன் போன்றவை, நிதிச் சேர்த்தல், காப்பீட்டுத் தயாரிப்புகள் போன்றவற்றிலும் பேங்க் ஆப் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.
பாங்க் ஆப் இந்தியா, கோவை மண்டலம் இன்று கோவை ஐடிசி வெல்கம் நிறுவனத்தில் வாடிக்கையாளர் களுக்கான அவுட்ரீச் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
இதில் வங்கியின் கிளைகள் ரூ.60 கோடிக்கு மேல் கடன்களை அனுமதித்தன.
வங்கியின் தலைமை அலுவலகத்தின் பொது மேலாளர் வி.ஆனந்த், கோவை மண்டல மேலாளர் அஜெய் தாக்கூர் ஆகியோர் பயனாளிகளுக்கு கடன் அனுமதி கடிதங்களை வழங்கினர்.
பொது மேலாளர் வி.ஆனந்த் வங்கியின் முதன்மை வாடிக்கையாளர்களைப் பாராட்டி கௌரவித்தார், டெபாசிட் மற்றும் கடன் ஆகிய இரண்டிலும் வங்கியின் சிறப்பம்சங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இதையொட்டி நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வங்கியின் 100 முதன்மை வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த அமர்வில் ஆனந்த், அஜெய் தாக்கூர் ஆகியோர் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
வாடிக்கை யாளர்களுக்குப் பயன்தரும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். வங்கி மற்றும் மண்டலத்தின் வணிகம் மற்றும் முன்னேற்றம் குறித்து அஜெய் தாக்கூர் விளக்கமளித்தார்.
மேலும் வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக வணிகத்தைக் கோரினார். என்பிஏ கடன் வாங்கியவர்களை அவர் மேலும் சந்தித்து பல கணக்குகள் தீர்வு எட்டப் பட்டன.
பின்னர் கரூரில் மண்டலத்தின் 3வது எஸ்எம்இ கடன் செயலாக்க மையத்தை பொது மேலாளர் வி.ஆனந்த் திறந்து வைத்தார்.