fbpx
Homeபிற செய்திகள்பாங்க் ஆப் இந்தியா கோவை மண்டல அலுவலகம் சார்பில் விஜிலன்ஸ் விழிப்புணர்வு வாரவிழா

பாங்க் ஆப் இந்தியா கோவை மண்டல அலுவலகம் சார்பில் விஜிலன்ஸ் விழிப்புணர்வு வாரவிழா

விஜிலன்ஸ் விழிப்புணர்வு வாரம் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், ஊழல் எதிர்ப்பு போராட் டத்தின் ஒரு பகுதியாக, விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரம், அக்டோபர் 27 முதல் நவம்பர் 1, 2025 வரை கொண்டாடப்பட்டது.

இது தொடர்பாக, பாங்க் ஆப் இந்தியாவின் கோவை மண்டல அலுவலகம் சார்பில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் விஜிலென்ஸ் விழிப்புணர்வு வார விழா கடைபிடிக்கப்பட்டது.

இந்த வாரத்தில், “விஜிலென்ஸ் மற்றும் நமது பகிரப்பட்ட பொறுப்பு” என்ற கருப்பொருளில் விழிப்புணர்வைப் பரப்புவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

அக்டோபர் 27, 2025 அன்று, நேர்மையுடன் நடப்பதற்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி பாங்க் ஆப் இந்தியாவின் கோவை துணை மண்டல மேலாளர் சிவ சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டல அலுவலகம் மற்றும் கிளைகளின் அனைத்து ஊழியர்களும் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

துணை மண்டல மேலாளர் சிவசுப்பிரமணியன் பேசுகையில், தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு கண்காணிப்பு மூலம் வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் நன்னடத்தையை சிறப்பாக நிலைநிறுத்துமாறு அனைத்து
ஊழியர்களுக்கும் அறிவுறுத்தினார்.

வார விழாவின்போது, கோவை மண்டல அலுவலக வளாகத்தில் பல்வேறு ஊழல் எதிர்ப்பு கருப் பொருள்களை வலியுறுத்தும் ரங்கோலி போட்டி நடந்தது. மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட அனைத்து ஊழியர்களுக் கும் ஆன்லைன் வினாடி வினா போட்டியும் நடத்தப்பட்டது.

கிராமப்புற மற்றும் சிறு நகர்ப்புற கிளைகள் மூலம் வெளிப் படைத் தன்மை, ஊழல் எதிர்ப்பு, ஒருமைப்பாடு மற்றும் தடுப்பு குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வு ஒருமைப்பாடு, நெறிமுறை நிர்வாகம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img