தமிழ்நாடு அறிவியல் தொழிநுட்ப மாநில மன்றம் நிதி உதவியுடன், வேளாண் நுண்ணுயிரியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய கிராமப்புற விவசாயிகள் தொழில்முனைவோர் மற்றும் பெண்கள் வாழ் வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அசோலா பேரளவு உற்பத்தி உயிர் உரம் மற்றும் தீவனம் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற்றது.
மூன்று நாள் பயிற்சியின் தொடக்கவிழா வேளாண் நுண்ணுயிரியல் துறை கருத்தரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் தொண்டா முத்தூர் மற்றும் S.S.குளம் வட்டத்திற்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட விவசாயிகள், சுய தொழில் முனைவோர் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். இதன் தொடக்க விழாவின்போது வேளாண் நுண்ணுயிரியல் துறை தலைவர் முனைவர் சிவகுமார் வரவேற்புரை வழங்கி, விருந்தினர்களை சிறப்பு செய்தார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் செயல் துணை வேந்தர் முனைவர் தமிழ்வேந்தன் ‘அசோலா’ பேரளவு உற்பத்தி பற்றிய பயிற்சியை துவக்கி வைத்து தலைமையுரை ஆற்றினார்.
அவர் தனது உரையில் விவசாயிகள் உணவு தன்னிறைவை மட்டும் கருத்தில் கொள்ளாமல் ஊட்டச்சத்த்து மற்றும் ஆரோக்கியத் தன்னிறைவை கருத்தில்கொண்டு அசோலா போன்ற இதர உயிர் உரங்களையும் பயன்படுத்த வலியுறுத்தினார்.
தொடர்ந்து இயற்கை வள மேலாண்மை இயக்குனர் பாலசுப்ரமணி யம் அசோலா போன்ற நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து முன்னாள் இயற்கை வள மேலாண்மை இயக்குனர் குமார் சிறப்பு விருந்தினரான கலந்து கொண்டு பேசுகையில், “அசோலாவை எளிதில் உற்பத்தி செய்து உரமாகவும், கால் நடைகளுக்கு ஒரு மாற்று இணை உணவாகவும் பயன்படுத்தலாம்“ என்றார்.
இப்பயிற்சியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.மு.ஞானசித்ரா நன்றியுரை வழங்கினார். தொடர்ந்து பயிற்சியில் கலந்து கொண்ட 30 விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.



