இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஃபண்ட் ஹவுஸ்களில் ஒன்றான ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட், தங்களின் புதிய நிதி வழங்கலான, ஆக்சிஸ் கிரிசில் IBX 50:50 கில்ட் பிளஸ் SDL ஜூன்2028 இன்டெக்ஸ் ஃபண்ட் ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.
இது கிரிசில் IBX 50:50 கில்ட் பிளஸ் SDL ஜூன் 2028 இன்டெக்ஸ் – ஜூன் 2028-ன் உட்கூறுகளில் முத லீடு செய்யும் திறந்தநிலை இலக்கு முதிர்வு குறியீட்டு நிதியாகும்.
ஒரு ஒப்பீட்டளவில் அதிக வட்டி விகித ஆபத்து மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த கடன் ஆபத்து கொண்டது. இந்த புதிய நிதியானது கிரிசில் IBX 50:50 கில்ட் பிளஸ் SDL குறியீடு – ஜூன் 2028 ஐ கண்காணிக்கும்.
இந்த திட்டத்திற்கான நிதி மேலாளர்கள் கௌஸ்துப் சுலே மற்றும் ஹர்திக் ஷா. குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ. 5,000. மேலும் அதன் பிறகு, ரூ. 1/- இன் மடங்குகளில் இருக்கிறது. பொருந்தக்கூடிய வெளியேறும் சுமை இல்லை.
ஆக்சிஸ் கிரிசில் IBX 50:50 கில்ட் பிளஸ்SDL ஜூன்2028 இன்டெக்ஸ் ஃபண்ட்: இந்த திட்டத்தின் முதலீட்டு இலக்கு ஆனது , கண்காணிப்பு பிழைகளுக்கு உட்பட்டு, கிரிசில் IBX 50:50 கில்ட் பிளஸ் SDL இன்டெக்ஸ் – ஜூன் 2028-ல் மதிப்பிடப்படும் பத்திரங்களின் மொத்த வருமானத்திற்கு சமமான முதலீட்டு வருமானத்தை செலவுகளுக்கு முன் வழங்குவதாகும்.
எவ்வாறாயினும், இந்த திட்டத்தின் முதலீட்டு நோக்கம் அடையப்படும் என்பதற்கு எந்த உறுதியும் அல்லது உத்தரவாதமும் இருக்க முடியாது.
அத்தகைய நிதிகள் திறந்த நிலையில் இருப்பதால், முதலீட்டாளர்கள், முறையான முதலீடு மற்றும் திரும்பப் பெறும் வசதிகளை பயன்படுத்தி தங்கள் நோக்கங்களை சந்திக்க, இந்த நிதியில் நுழைவு மற்றும் வெளியேறலை வடிவமைக்க முடியும்.
கூடுதலாக, இந்த நிதிகளில் வரையறுத்த காலம் இல்லாததால், முதலீட்டாளர்கள் எந்த இடையூறும் இன்றி காலத்தின் நடுவில் தங்கள் முதலீடுகளை எளிதாக மீட்டெடுக்க விரும்பினால், அவர்களுக்கு பணப்புழக்கத்தை வழங்குகிறது.