கேஎம்சிஎச் காலேஜ் ஆஃப் ஆக்குபேஷனல் தெரபி மற்றும் டிபார்ட் மெண்ட் ஆஃப் ஆக்குபேஷனல் தெரபி சார்பில் கோவை ரேஸ்கோர்ஸில் உலக தொழில் சிகிச்சை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் 350 பேர் கலந்து கொண்டு, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் தொழில் சார் சிகிச்சையின் இன்றியமையாத பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த பேரணியை தலைமை விருந்தினராக கோயம்புத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் நிர்மலா துவக்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதில் தொழில்சார் சிகிச்சையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
சிறப்பு விருந்தினர்களான டாக்டர்.என்ஜிபி ஆர்-இடி நிர்வாக அறங்காவலர் டாக்டர்.தவமணி டி.பழனிசுவாமி மற்றும் டாக்டர் அருண் என்.பழனி சுவாமி, நிர்வாக இயக்குனர், கே.எம்.சி.எச். COT இன் முதல்வர் பேராசிரியர் எஸ்.ஜி. பிரவீன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்.
துணை முதல்வர் சுகி சௌமியான் நன்றியு ரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.