fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலையில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் ஆய்வு

திருவண்ணாமலையில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை வட்டம், தென்மாத்தூர் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் திட்டம் சார்பாக மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் வீடுதோறும் மதி பொருட்கள் விற்பனையை செய்தியாளர்களுடன் சென்று துவக்கி வைத்து, மகளிர் சுய உதவிக்குழுக்கள் விற்பனை பொருட்களை பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் திட்டம் சார்பாக வீடுகள் தோறும் மதி பொருட்கள் என்ற திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் உள்ள 860 ஊராட்சிகளிலும், ஒரு ஊராட்சிக்கு இரண்டு பெட்டகங்கள் என்ற அடிப்படையில் சுமார் 1720 பெட்டகங்கள் ஊராட்சிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. தற்பொழுது வரை 644 பெட்டகங்கள் அனுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டகத்திலும் வீட்டிற்கு தேவையான 28 பொருட்கள் அடங்கியுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2027 அரசு பள்ளிகளுக்கு வேண்டிய தூய்மை செய்யும் பொருட்கள் ரூபாய் ஏழு லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி 100 லிட்டர் மணிலா மரச்செக்கு எண்ணெய் ஒவ்வொரு ஊராட்சிக்கும் அனுப்பப்பட்டு, தரமான பொருட்கள் பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்கள் பயனடையும் வண்ணம் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இதுவரையில் ஒட்டு மொத்தமாக ரூ. 1.5 கோடி மதிப்பீட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ. 6.83 கோடி மதிப்பீட்டிலான பொருட்கள் ஊராட்சிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதன்மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தியாளர்களுக்கு ரூ. 8 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் திட்ட இயக்குநர் டாக்டர் மணி மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img