கோவை பன்னாட்டு அரிமா சங்கம், கோவை ஸ்பின் சிட்டி அரிமா சங்கம் மற்றும் கோவை மாநகர காவல் துறையுடன் இணைந்து ராயல் கேர் மருத்துவமனை, காவல் துறையினருக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் இலவச கல்லீரல் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாமை காவலர் மருத்துவமனை, PRS வளாகத்தில் இரு நாட்கள் நடத்தியது.
இதில் Ln.V.ஆனந்தன் தலைவர் ஸ்பின் சிட்டி அரிமா சங்கம், முன்னாள் பன்னாட்டு இயக்குனர் மற்றும் அகில இந்திய லயன்ஸ் கூட்டமைப்பு தலைவருமான Ln.R.மதன கோபால், ஸ்பின் சிட்டி அரிமா சங்கத்தின் செயலாளர் Ln. Er.R.P.சுந்தர்ராஜன் மற்றும் பொருளாளர் In.K.நாகமாணிக்கம் முன்னிலையில் காவல் ஆணையர் V.பாலகிருஷ்ணன் மற்றும் ராயல் கேர் மருத்துவமனை
தலைவர் Dr. K.மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத் தனர்.
இதில் மருத்துவர்கள் சவுண்டப்பன் மற்றும் சந்தீப் சந்திரசேகர் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோத னைகளை வழக்கினர்.
தொடர்ந்து 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.