fbpx
Homeபிற செய்திகள்வெயிலில் இருந்து பறவைகளை பாதுகாக்க மண் குவளை வழங்கி விழிப்புணர்வு

வெயிலில் இருந்து பறவைகளை பாதுகாக்க மண் குவளை வழங்கி விழிப்புணர்வு

காலநிலை மாற்றத்தால் கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த வெயிலின் தாக்கம் பறவைகள், வனவிலங்குகளின் உயிரிழப்புகளுக்கும் காரணமாகிறது. உணவு இல்லாமல்கூட கொஞ்சம் நாட்கள் வாழலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது என்பது எதார்த்தமான உண்மை.

எனவே நம்மை காப்பது போல், நம்மைச்சுற்றி வாழும் சின்னஞ்சிறிய பறவைகளை இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து காப்பாற்ற பறவைகளுக்கு வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளில் 2350 மண் குவளைகள் மாணவ மாணவிகளுக்கு, பொது மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஐந்தாம் ஆண்டாக கோவை பெரியகடை வீதி பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி படிக்கும் ஐம்பது மாணவ மாணவிகளுக்கு டபுள்யு.என்.சி.டி சார்பாக பறவையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பறவைகளின் தாகம் தணிக்க மண் குவளைகள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img