Homeபிற செய்திகள்ஜி.ஆர்.ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் கேம்பிரிட்ஜ் பள்ளியில் சறுக்கு விளையாட்டு போட்டி

ஜி.ஆர்.ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் கேம்பிரிட்ஜ் பள்ளியில் சறுக்கு விளையாட்டு போட்டி

ஜி.ஆர்.ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் கேம்பிரிட்ஜ் பள்ளியில் (RAIS) சர்வதேசப் பள்ளிகளின் சங்கம் சார்பில் சறுக்கு விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த இளம் சறுக்கு வீரர்கள் பங்கேற்றனர். 6 வயது முதல் 19 வயது வரை உள்ள மாணவர்கள் இந்த போட்டியில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். 

இந்நிகழ்வில் ஜிவிகே வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி மற்றும் வெங்கடலட்சுமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் சுனிதா  சிறப்பு விருந்தினராகவும், முதல்வர் வீணாகுமாரி சிறப்பு அழைப்பாளராகவும் கலந்துகொண்டு 

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். 

படிக்க வேண்டும்

spot_img