கோவை அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் மற்றும் உயர் கல்வி நிறுவனத்தில் 2023-2024ம் ஆண்டுக்கான ஆசிரியர்களுக்கான ஆசிரியர் புதிய பயிற்சி திட்டம் குரு தஷ்டா சமீபத்தில் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.கிருஷ்ணன் துவக்க உரையாற்றினார். அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவன துணைவேந்தர் வி.பாரதி ஹரிசங்கர் தலைமை உரையாற்றினார்.
குரு தஷ்டா ஒருங்கிணைப்பாளர் ஏ. விஜயலட்சுமி வரவேற்றார்.
உயிர் வேதியியல் துறை தலைவரும் குரு தஷ்டா அமைப்புச் செயலாளருமான பேராசிரியர் எஸ்.காயத்ரி நிகழ்ச்சியின் கண்ணோட்டம் குறித்து பேசினார்.
ஐகியூஏசி ஒருங்கிணைப்பாளர் யு.ஜெரினாபி நன்றி கூறினார்