fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பணி ஒதுக்கீடு

நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பணி ஒதுக்கீடு

நீலகிரி மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி அலுவலர்கள் 1, 2, 3, 4க்கான கணினி மூலம் இரண்டாம் கட்ட சீரற்ற மயமாக்கல் பணி கள் தேர்தல் பொது பார்வை யாளர் மஞ்சித்சிங் பரார் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான அருணா முன்னிலையில் நடைபெற்றது.

இரண்டாம் கட்ட சீரற்ற மயமாக்கலில் உதகை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 239 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் கூடுதலாக 20 சதவீதம் என 1173 வாக்குச்சாவடி அலுவலர்களும், கூடலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 224 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் கூடுதலாக 20 சதவீதம் என 1108 வாக்குச்சாவடி அலுவலர்களும், குன்னூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 226 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் கூடுதலாக 20 சதவீதம் என 1109 வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் நீலகிரி மாவட்டத்திலுள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக் குட்பட்ட 689 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் கூடுதலாக 20 சதவீதம் என மொத்தம் 3391 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 07.04.2024 அன்று பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், மகளிர் திட்ட இயக்குநர் காசிநாதன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் / வருவாய் கோட்டாட்சியர்கள் மகராஜ் (உதகை), சதீஸ் (குன்னூர்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுரேஷ் கண்ணன், வட்டாட்சியர்கள் சரவணகுமார் (உதகை), ஸ்ரீனிவாசன் (தேர்தல்) உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img