முன்னணி தரமான டிஎம்டி உற்பத்தியாளர் ஏஆர்எஸ் ஸ்டீல்ஸ், பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ‘உண்மையை அறிவோம்’ பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக சுமார் 15 கோடி ரூபாய் முதலீட்டில், டிஎம்டி பார்களை சோதிக்க பிரத்யேக ஜெர்மன் தொழில்நுட்பங்களுடன் நிறுவப்பட்டுள்ள 12 நடமாடும் தொழில்நுட்ப வாகனங்கள் மூலம் அடுத்த ஓர் ஆண்டுக்கு தமிழ் நாடு முழுவதும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும்.
இந்த வாகனங்களில் நிறுவப்பட்டுள்ள சிறப்புத் தொழில்நுட்பமானது, டிஎம்டி கம்பிகளின் தரம், உறுதிப்பாடு மற்றும் நீடித்து நிற்கும் தன்மை போன்ற பல்வேறு அம் சங்களை ஆராய்ந்து அதன் தரநிலை குறித்த அறிக்கையை இலவசமாக வழங்குகிறது.
ஏஆர்எஸ் ஸ்டீல்ஸின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஷ்வனி குமார் பாட்டியா கூறுகையில், ‘நுகர்வோருக்கு பொருளின் தரத்தை தீர்மானிக்க எந்த வழியும் இல்லை, அதே நேரத்தில் கட்டமைப் புகளின் நீடித்த தன்மையில் தரம் குறைந்த டிஎம்டி கம்பிகளின் விளைவை அவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை.
இவற்றை கருத்தில் கொண்டு, ஏஆர்எஸ் ஸ்டீல்ஸ் நிறுவனம், தொழில்துறையில் இது போன்ற ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்து கிறது.
கடந்த 3 ஆண்டுகளில் எங்கள் நிறுவனம் 1.2 லட்சம் டன் விற்பனையில் இருந்து 1.5 லட்சம் டன் விற்பனையாக 20% வளர்ச் சியை எட்டியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் எங்களது ஆண்டு வருவாய் 560 கோடியிலிருந்து 900 கோடியாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண் டில் ஏறத்தாழ 100 கோடி வரை முதலீட்டில் 30% வரை அதிகரிக்க ஏஆர்எஸ் திட்டமிட்டுள்ளது’ என்றார்.