கோவை ஆயுதப்படை அலுவலக கூட்டரங்கில், முதலுதவி அளிப்பது எப்படி? என்பது குறித்து ஆயுதப்படை போலீசாருக்கு வாரம் ஒருநாள் வீதம் 4 வாரங்கள் செயல்விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
திடீரென மயக்கம் அடைந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கும் முறை குறித்து இன்று நடந்த செயல்விளக்க நிகழ்ச்சியில் ஆயுதப்படை உதவி ஆணையர் ஏ.சேகர், ஆய்வாளர் ஜெயவேல் மற்றும் திரளான போலீசார் பங்கேற்றனர்.



