fbpx
Homeபிற செய்திகள்வீனஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

வீனஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்றது.பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாணவிகள் ஏ.கிருத்திகா 588, அபிராமி 584, எஸ்.மஹாஹரிணி 583 மதிப்பெண்கள் பெற்றனர்.

தேர்வெழுதிய 214 மாணவர்களில் 213 பேர் தேர்ச்சி பெற்றனர். 550-க்குமேல் 21 பேரும்,500-க்கு மேல் 73 பேரும் மதிப்பெண்கள் பெற்றனர். இவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித் தாளாளர் வீனஸ் எஸ்.குமார் தலைமை வகித்தார்.

முதல்வர் ரூபியாள்ராணி முன்னிலை வகித்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் ஆங்கிலத் துறைபேராசிரியர் எம்.அன்பானந்தம் கலந்து கொண்டு 10, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுக் கேடயங்களும், ஊக்கத் தொகையும் வழங்கினார்.

மேலும், பத்தாம் வகுப்பில் பாட வாரியாக நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

விழாவில், பள்ளி துணை முதல்வர் டி.நரேந்திரன், நிர்வாக அலுவலர் ரூபிகிரேஸ் போளிகலா, நர்சரி பள்ளி முதல்வர் எஸ்.பால்மணி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img