சென்னை அப்போலோ கேன்சர் சென்டரில் தெற்காசியாவின் முதல் ‘சைபர்நைஃப் எஸ் 7 எஃப்ஐஎம் ரோபோட்டிக் ரேடியோ’ அறுவை சிகிச்சை சாதனம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இது, புற்றுக்கட்டிகளுக்கும் மற்றும் புற்று அல்லாத பிற கட்டிகளுக்கும் புரட்சிகர சிகிச்சை வழிமுறையை வழங்குகிறது.
புற்றுநோய் கட்டிகளுக்கும், புற்றுநோய் அல்லாத கட்டிகளுக்கும் மற்றும் கதிரியக்க சிகிச்சை பரிந்துரைக்கப்படும் பிற பாதிப்பு நிலைகளுக்கும் உடலில் ஊடுருவல் இல்லாத சிகிச்சைக்கான சாதனமே ‘சைபர்நைஃப் எஸ்7 எஃப்ஐஎம்‘ முறையாகும். மூளை, முதுகுத்தண்டு, புராஸ்டேட் மற்றும் அடிவயிறு புற்றுநோய்கள் உட்பட, உடல் நெடுகிலும் உள்ள பாதிப்பு நிலைகளுக்கு சிகிச்சையளிக்க இது பயன்படுத் தப்படுகிறது.
இதுகுறித்து கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் மகாதேவ் போத்தராஜு கூறுகையில், ‘சைபர்நைஃப்எஸ்7 எஃப் ஐஎம் சிகிச்சைக்கான கால அளவு பொதுவாக 30 முதல் 90 நிமிடங்கள் வரை இருக்கலாம்.
இந்நேரத்தில் பல்வேறு கோணங்களிலிருந்து 100 முதல் 200 கதிர்வீச்சு கற்றைகள் செலுத்தப் படுகின்றன. ஒவ்வொரு கற்றையும் ஏறக்குறைய 10 முதல் 15 விநாடிகள் வரை நீடிக்கும்.
இந்த சிகிச்சை அமர் வுகள் உடலில் ஊடுருவல் அல்லாத வெளிநோயாளிக்கான செயல்முறைகளாக மேற்கொள்ளப்படுகின்றன. உணர்விழப்பு மருந்தோ அல்லது உடலில் கீறல்களோ இதற்கு தேவைப்படாது.
இதனால் இந்த சிகிச்சை நடைபெறும் காலகட்டத்தில் பெரும்பாலான நோயாளிகள் தங்களது தினசரி செயல் பாடுகளை வழக்கம்போல தொடர்ந்து மேற்கொள்ள இயலும்’ என்றார். சைபர்நைஃப் எஸ் 7 எஃப்ஐஎம் சிஸ்டம் என்ற சாதனத்தை நிறுவி சேவையைத் தொடங்கும் தெற்காசியாவின் முதல் மருத்துவ மையம் என்ற புதிய அளவு கோலை இம்மருத்துவமனை மீண்டும் ஒருமுறை நிறுவியிருக்கிறது.
‘சைபர்நைஃப்– ல் சான்றிதழுடன் கூடிய ஃபெல்லோஷிப் பயிற்சி திட்டத்தை வழங்குவதற்கு நாட்டில் அங்கீகாரம் பெற்ற முதல் மையமாக அப்போலோ கேன்சர் சென்டர் திகழ்கிறது. மருத்துவ செயல்பாடுகளில் பயிற்சி மற்றும் மருத்துவ கல்வி மீது அப்போலோ குழுமம் கொண்டிருக்கும் பொறுப்புறுதியை இந்த அங்கீகாரம் வலுவாக நிரூபிக்கிறது.



